ப்ரயாக்ராஜ்: ப்ளேட்லெட்ஸுக்குப் பதில் லெமன் ஜூஸை ட்ரிப்ஸில் ஏற்றியதால் டெங்கு நோயாளி உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில துணை முதல்வர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நோயாளிக்கு ரத்த ப்ளேட்லெட்ஸ் ஏற்றுவதற்குப் பதிலாக எலுமிச்சை சாறு ஏற்றப்பட்டது. அதனால் அவர் உடல்நிலை மோசமாகி வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இது குறித்து தனியார் மருத்துவமனை முதல்வர் கூறுகையில், “ப்ளேட்லெட்ஸை நாங்கள் வழக்கமாக வாங்கும் மருந்து நிறுவனத்திலிருந்து பெறாமல் வேறு இடத்திலிருந்து பெற்றிருந்தோம். அதில் ஏதும் கோளாறு உள்ளதா என்று தெரியவில்லை. மூன்று யூனிட் ப்ளேட்லெட்ஸ் ஏற்றிய பின்னர் அவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வைரல் வீடியோவை மேற்கோள் காட்டி துணை முதல்வர் பதக் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவமனையில் டெங்கு நோயாளிக்கு ப்ளேட்லட்ஸுக்குப் பதிலாக எலுமிச்சை ஜூஸ் ஏற்றப்பட்டது குறிஹ்து வைரல் வீடியோவைக் கண்டேஎன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து அந்த மருந்துப் பையை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். தவறு உறுதியானால் மருத்துவமனை மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
प्रयागराज में मानवता शर्मसार हो गयी।
एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।
मरीज की मौत हो गयी है।
इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। @prayagraj_pol @igrangealld pic.twitter.com/nOcnF3JcgP
— Vedank Singh (@VedankSingh) October 19, 2022