முட்டைக் கண்ணுன்னு சொன்னா வருத்தப்படாதீங்க… மனுஷன் எப்படி சாதிச்சிருக்கார்னு பாருங்க!

பிறப்பிலேயே கண்கள் பெரிதாக கொண்டவர்களை பார்த்து ‘முட்டைக் கண்’ என்று உலகம் கேலி பேசுவதுண்டு. ஆனால் இந்த முட்டை கண்ணையே கான்செப்ட்டாக வைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் ஒருவர்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா. இவர் தமது கண் இமைகளை விட்டு 18 மில்லி மீட்டர் தூரத்துக்கு விழிகளை வெளியே கொண்டு வந்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கண் விழிகளை வெளியில் கொண்டு வந்து மீண்டும் அவற்றை பழைய நிலைக்கு எடுத்து செல்லும்போது சில வினாடிகள் பார்வையை இழக்க நேரிடும் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கின்றார் மெஸ்கிடா.

பூச்சிகளை உட்கொள்ள அனுமதி? – சிங்கப்பூர் அரசு பரிசீலனை!

ஆனாலும் தமது தாய், தந்தை மற்றும் இறைவன் தமக்கு தந்த பரிசாக வித்தியாசமான இந்த திறமையை கருதுவதகா கூறும் அவர், தன் திறமையை வெளிப்படுத்தி சாதனை புரிய தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.

யாராவது கண் விழிகளை லேசாக உருட்டினாலே மிரண்டு போகிறவர்கள், மெஸ்கிடா தமது கண்களை உருட்டி பார்க்கும்போது பார்வையாளர்கள் அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சி அடைய தான் செய்கிறார்கள் என்கின்றனர் இவரது நெருங்கிய நண்பர்கள் பெருமிதத்துடன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.