
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வரும் செவ்வாய்க்கிழமை (25-10-2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.