15 வருடங்கள் செல்லமாக வளர்த்த நாய்க்கு ப்ளக்ஸ் -நெகிழ்ச்சியுடன் பார்த்துச்சென்ற பொதுமக்கள்

வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் இறப்பிற்கு ப்ளக்ஸ் வைத்து குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்தனர். வளர்ப்பு நாய்மேல் வைத்த பாசத்தை பிரதிபலித்த பேனரை வியப்புடன் பார்த்து பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சென்றனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண ராமன். இவரது வீட்டில் ஜாக் (எ)ஜாக்கி என்ற நாட்டுநாயை 15 வருடமாக பிரியமாக குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல்நலக் குறைவாலும் வயது மூப்பின்காரணமாகவும்  ஜாக்கி இறந்துவிட, குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே கல்யாணராமனின் மகன் கணேஷ்ராம் தன் நண்பர்களுடன் இணைந்து ஜாக்கியின் இழப்பை பகிர்ந்துகொள்ளும் வகையில் சாலை ஒரத்தில் ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

image

அதில் மன்னைவிட்டுமறைந்தாலும் எங்கள் மனதைவிட்டு மறையாத உன் நினைவுகள் கோடி கோடி என தங்களது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். வளர்ப்பு நாய் ஜாக்கியின் இறப்பிற்க்கு நண்பர்கள் இணைந்துவைத்த ப்ளக்ஸை பொதுமக்கள் நின்று பார்த்து செல்போனில் புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.