ராஞ்சி: ஜார்கண்டின் சிங்பும் மாவட்டத்தின் சைபசா கிராமத்தில் 26 வயது மதிக்கத்தக்க பெண் மென்பொறியாளர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மென்பொறியாளரான இவர், வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை மலை, ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து, ஆண் நண்பரை தாக்கிய அந்த கும்பல், அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில், அந்த பெண் மயங்கியதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதன் பின்னர், அந்த பெண் அங்கிருந்து தப்பி பெற்றொருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட அந்த பெண் சைபாசா சதார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement