ஆண்டாண்டு காலமாக தங்கம்தான் பெரும்பாலானோரின் முதலீடாக இருந்துவருகிறது. இதற்குக் காரணம் அழகு, அந்தஸ்து மற்றும் திருமணம் ஆகிய மூன்றையும் சொல்லலாம். அதுபோக, எப்போது வேண்டுமானாலும் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து நமக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியும் என்பதும் ஒரு முக்கியக் காரணம்.
உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.இந்நிலையில் தீபாவளிக்கு தங்கம் வாங்க நினைத்தோருக்கு அதிர்ச்சி ஏனெனில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 61,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,700 ரூபாய் உயர்ந்து, ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.