ஆந்திரா: ஒரே இடத்தில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் ஒன்றாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலகம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
image
யாரோ ஒருவர் டிராக்டரில் குரங்குகளை கொண்டு வந்து வனப்பகுதியில் விட்டதாக, வன அதிகாரி முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு முழுமையாக விவரங்கள் தெரிய வரும் என அவர் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.