சின்னசேலம் அருகே சொத்து பிரிப்பதில் அண்ணன், தம்பி இடையே தகராறு: தடுக்க வந்த தாய் அடித்து கொலை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த தாயை அடித்து கொலை செய்த 2 மகன்கள், மருமகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வேலம்மாள் என்பவரை கொலை செய்யப்பட்டவர் ஆவர். கணவர் இறந்த நிலையில் இவருக்கு சொந்தமான 1.80 ஏக்கர் நிலம் மற்றும் கடன் 16 லட்சம் ரூபாயை பிரிப்பதில் 2 மகன்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது மோதலை தடுக்க வந்த தாய் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வேலம்மாள் மகள் செல்வி அளித்த புகாரின் பேரில் மூத்த மகன் சுரேஷ், மருமகள் கௌதமி, அவருடைய மைத்துனர் கெளதம் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், மற்றோரு மகன் வேல்முருகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.