தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பூபதிராஜா (28). டிப்ளமோ முடித்த இவர், தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதற்கு முன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பூபதிராஜா கடந்த சில நாட்களாகவே சோகமாகவே இருந்து வந்துள்ளார்.
இதனால் அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதில் மனமுடைந்த பூபதிராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றிய பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.