வரும் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா ?

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை மனதில் வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களுக்கு முன்பே வங்கிப் பணிகளை பலர் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 2022 நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நவம்பர் மாதம் மொத்தம் 10 நாட்கள் விடுமுறையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா/குட். பெங்களூரு மற்றும் இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

நவம்பர் 8- குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா. இந்த நாளில் ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

நவம்பர் 11 – கனகதாச ஜெயந்தி/வாங்கல விழா. இந்த நாளில் பெங்களூரு, இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் – ஷில்லாங் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

அது தவிர,

நவம்பர் 12 – இரண்டாவது சனிக்கிழமை

நவம்பர் 13 – ஞாயிறு

நவம்பர் 20 – ஞாயிறு

நவம்பர் 26 – நான்காவது சனிக்கிழமை

நவம்பர் 27 – ஞாயிறு

ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு திருவிழாக்கள் காரணமாக அந்த மாநிலங்களில் மட்டுமே ஒரு சில நாட்கள் பண்டிகை கால விடுமுறையாக இந்த மாதம் உள்ளது. எனவே வங்கிகள் அனைத்தும் மூடப்படும் தேசிய விடுமுறையாக நவம்பர் மாதத்தில் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.