தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடைபெற உள்ளது. திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி எழுந்தருளிய ஆகியவை நடைபெற்று வருகின்றன. 5-ம் நாளான இன்று ஜெயந்தி நாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர் என்ற எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் வசதிக்காக திருசெந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்திருக்கிறார். திருச்செந்தூரில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சி அனைத்தும் சன் நியூசில் நாளை மாலை 4 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.