29/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,574 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 – பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போத சிகிச்சையில், 18,802 பேர் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணியுடன் முடிவடையும் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதனப்டி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்,  இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 662- ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.95 சதவிகிதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து  நேற்று 2,161 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 852- ஆக உயர்ந்துள்ளது. மீட்பு விகிதம் தற்போது 98.77% ஆக உள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புடன் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 802- ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,008- ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை 219.62 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 90.07 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.