பாலம் அறுந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியானது!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலத்தை புனரமைக்கும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5 நாள்களுக்கு முன்னர் தான் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக மக்கள் இந்த பாலத்தில் பயணிக்க வந்தனர். மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது பாலத்தின் கேபிள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.

சுமார் 100 பேரை மட்டுமே தாங்கும் இந்த பாலத்தில் சம்பவத்தின் போது 500 பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இன்னும் இரண்டு மூன்று பேரை தேடும் பணிகள் மீதம் உள்ளதாக பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.

இந்த பாலம் விபத்தில் சிக்கி குஜராத் மாநில பாஜக எம்பி மோகன் குந்தாரியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.