சென்னை ராணிப்பேட்டை அடுத்த சோளிங்கர் அருகே கீழாண்டமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் ஒரு கூலிதொழிலாளி. இவருக்கு இரண்டுக்கு மகள் உள்ள நிலையில், இவரது இரண்டாவது மகள் நிவேதா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நிவேதா நேற்று மாலை தனது வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து போடும் போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் வயர் மீதுபட்டதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதனால், படுகாயம் அடைந்த நிவேதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக நிவேதாவை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.