ஃப்ரிட்ஜ் வெடிப்பு… வெளியூர் செல்வோர் கவனிக்க வேண்டியவை!

சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில், ஃப்ரிட்ஜ் வெடித்து மூன்று பேர் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கானிக் முரளி

இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு ஃப்ரிட்ஜ் பயன்பாடு குறித்து அச்சம் வரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மெக்கானிக் முரளி விளக்கம் அளிக்கிறார்…

பொதுவாக ஃப்ரிட்ஜ் வெடிக்க அதிக வாய்ப்புகள் இல்லை. ஃப்ரிட்ஜில் ஏதாவது மெக்கானிக் வேலை மேற்கொண்டு, தவறுதலான பிரஷர் அல்லது தவறுதலான கியாஸை வெளியேற்றாமல் விட்டுவிட்டால் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை ஃப்ரிட்ஜ் எதனால் வெடித்தது என்பது இன்னும் தெரியவில்லை.

இப்போது இன்வென்டர் ஃபிரிட்ஜ்கள்தான் சந்தையில் அதிகமாக கிடைக்கின்றன. இவற்றில் உள்ள கம்பிரஸர் (Compressor) தேவைக்கேற்ப மாறுபட்ட மின்சாரத்தில் (variation of current) ஓடும் திறன் கொண்டது. இந்த மாறுபட்ட மின்சாரத்தால்க்கூட இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம்.

பிரிட்ஜ் வெடிப்பு

இந்தச் சம்பவத்தில்…

  • ஃப்ரிட்ஜ் இன்வென்டர் ஃப்ரிட்ஜாக இருக்குமாயின், நீண்ட நாள்களாகச் செயல்படாமல் gas stroke ஏற்பட்டு, பிரஷரை வெளியே தள்ள கஷ்டப்பட்டு வெடித்திருக்கலாம்.

  • வீட்டில் ஏதாவது மின்சார பிரச்னை இருந்து, அதனால் ஃப்ரிட்ஜ் வெடித்திருக்கலாம்.

  • வெடித்த ஃப்ரிட்ஜில் இதற்கு முன்பு ஏதாவது மெக்கானிக் வேலை செய்யப்பட்டு, அதில் ஏற்பட்ட தவறுதலால் வெடித்திருக்கலாம்.

இவ்வாறு இந்தச் சம்பவத்தில் காரணங்கள் தெரியாததால் யூகங்களை மட்டும்தான் முன்வைக்க முடியும்.

வெளியூருக்குச் செல்லும் முன்பு செய்ய வேண்டியவை…

ஃப்ரிட்ஜின் பிளக்கை ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து கழற்றிவிட வேண்டும்.

பிரிட்ஜ்(Fridge)

வெளியூரில் திரும்பி வந்தபிறகு கவனிக்க வேண்டியவை…

  • ஃப்ரிட்ஜை திறந்து நன்றாகத் துடைக்க வேண்டும்.

  • மின்சார வயரை எலி கடித்திருக்கிறதா அல்லது மின்சார வயர் அறுந்திருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை எலி மின்சார வயரை கடித்திருந்தால், ஃப்ரிட்ஜிற்க்கு மின்சாரம் பாயாமல், அது செயல்படாது.

  • நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும் முன்பு மெக்கானிக்கை வரவழைத்து சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • பிளக்கை, ஸ்விட்ச் பாக்ஸில் போட்ட பிறகு மின்சாரம் பாய்கிறதா.. ஃப்ரிட்ஜ் வேலை செய்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • பகல் பொழுதிலேயே, ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு ஃப்ரிட்ஜை ஆன் செய்ய வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.