
என்ன தவம் செய்தேனோ – ஜெயம் ரவி நெகிழ்ச்சி
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரமான அருள்மொழிவர்மனாக நடித்திருந்தார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது கதாபாத்திரத்தில் தான் நடித்தது குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் ஜெயம் ரவி. அதில், ராஜராஜ சோழனுக்கு சதய விழா, அவரது புகழையும் பெருமையையும் போற்றி அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக திரையில் உம்மை பிரதிபலிக்க நான் என்ன தவம் செய்தேனோ என்று பதிவிட்டு இருக்கிறார் ஜெயம் ரவி.