ஒவ்வொரு நிலையிலும் உன்னை நேசிக்கிறேன்…விராட் கோலியின் பிறந்த நாளில் உருகும் அனுஷ்கா சர்மா: புகைப்படங்கள்


விராட் கோலியின் வேடிக்கையான புகைப்படங்களை வெளியிட்டு மனைவி அனுஷ்கா வாழ்த்து.


ஒவ்வொரு நிலையிலும் வடிவத்திலும் வழியிலும் உன்னை நேசிக்கிறேன் என உருக்கம்.

விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி அனுஷ்கா சர்மா வேடிக்கையான சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி நவம்பர் 5ம் திகதியான இன்று தனது 34 பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில் விராட் கோலியின் சிறந்த பாதியான மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா இருவரும் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்து பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு அனுஷ்கா சர்மா அவரது சமூக ஊடக பக்கத்தில் கோலியின் வேடிக்கையான சில புகைப்படங்களை வெளியிட்டு தனது அன்பு கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில், “எனது காதலே இன்று உனது பிறந்தநாள், அதனால் நிச்சியமாக உன்னுடைய சிறந்த கோணங்கள் மற்றும் புகைப்படங்களை இந்த பதிவிற்காக தேர்ந்தெடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”ஒவ்வொரு நிலையிலும் வடிவத்திலும் வழியிலும் உன்னை நேசிக்கிறேன்” என தெரிவித்து கணவர் விராட் கோலிக்கு அனுஷ்கா சர்மா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிலையிலும் உன்னை நேசிக்கிறேன்...விராட் கோலியின் பிறந்த நாளில் உருகும் அனுஷ்கா சர்மா: புகைப்படங்கள் | Anushka Sharma Share Funny Pictures Of Virat Birth

இந்தநிலையில், விராட் கோலியின் வேடிக்கையான புகைப்படங்கள் மற்றும் அனுஷ்கா சர்மா விராட் கோலி இருவருக்கும் இடையே இருக்கும் அன்பினை அவர்களது ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.