சென்னை: சென்னையில் மழையால் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்ற தீவிர தூய்மை பணி மேற்கொள்ள மாநரகராட்சி உத்தரவு அளித்துள்ளது. சாலைகளை சீரமைத்தல், மழைநீர் வடிகால் அடைப்புகளை சீர் செய்தல் போன்ற பணிகளை உடனே மேற்கொள்ள உத்தரவு அளித்துள்ளனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனே சீர் செய்ய மாநகராட்சியின் பேருந்து சாலை துறை அலுவலர்களுக்கு உத்தரவு அளித்துள்ளனர். சாலை தெருக்களில் தேங்கிய திடக்கழிவை அகற்ற தீவிர தூய்மை பணி செய்ய திடக்கழிவு மேலாண் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
