கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் இன்று (06) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.