புதுடில்லி : டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நகருக்குள் டீசல் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது அம்மாநில பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
பக்கத்து மாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கழிவுகளை தொடர்ந்து எரித்து வருவதால் இந்த காற்று மாசு உருவாகி வருகிறது. இதையடுத்து இன்று முதல் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த டில்லி நகருக்குள் டீசல் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காஸ் மற்றும் மின்சார வாகனங்கள் மட்டும் டில்லி நகருக்குள் வர அனுமதிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement