பதின்ம வயது சிறுவன் தனது தாய், சகோதரி உட்பட 4 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்!

அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான். கொலை வழக்கை வழக்கை விசாரித்து வரும் போலீஸார், பதின்ம வயது சிறுவன் கணினி விளையாட்டுக்கு அடிமையானவன் என்றும், ஆன்லைன் கேமிங் விளையாடுதற்காக அடிக்கடி தனது வீட்டில் பணத்தை திருடி வந்தான் என்றும் கூறினார். பதின்ம சிறுவன் தாத்தா (70), தாய் (32), 10 வயது சகோதரி, அத்தை (42) ஆகியோரை சனிக்கிழமை இரவு கொன்றான். அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கோடரியால் வெட்டிக் கொன்றான்.

“நான்கு பேரைக் கொன்ற பிறகு, சிறுவன் அவர்களின் உடல்களை அவர்களின் வீட்டிற்குப் பின்னால் உள்ள கட்டுமானத்தில் இருந்த செப்டிக் டேங்கில் புதைத்தான். நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பிய சிறுவனின் தந்தை ஹரதன் தேப்நாத் (ஒரு பேருந்து நடத்துனர்) உடல்களைக் கண்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தார்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

சிறுவனின் தந்தை வீட்டிற்கு வந்தபோது எல்லா இடங்களிலும் இரத்தம் சிதறியிருப்பதைக் கண்டார் என போலீஸார் தெரிவித்தனர். இதற்கு முன்னதாகவே, குற்றம் சாட்டப்பட்டவர் முன்பு தனது சொந்த வீட்டில் திருடியுள்ளார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யும் போது, ​​அவர்களின் அலறலை அக்கம் பக்கத்தினர் கேட்காத வண்ணம், அதிக ஒலியில் இசையை ஒலிக்கச் செய்தார் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

அவரது தந்தை மற்றும் அயலவர்கள் கூறியா தகவல்களை மேற்கோள் காட்டி கூறுகையில், சிறுவன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவன் என்றும், ஆன்லைன் கேமிங் விளையாடுவதற்காக அடிக்கடி தனது வீட்டில் பணத்தை திருடி வந்தான் என்றும் காவல் துறை அதிகாரி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை வாத்து விற்க சந்தைக்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய முயற்சிப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.