பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு; மகிழ்ச்சியில் துள்ளும் மாணவர்கள்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் சில இடங்களில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து மழைக்கு பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பு பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2 போக்குவரத்து வழித்தடத்தடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதன் பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக கடந்த காலங்களில் வழங்கிய அறிவுரைகள் போலவே தற்போதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி கட்டிடங்களில் தண்ணீர் வடிகிறதா? ஊறிப்போன சுவர்கள் உள்ளதா? அனைத்தையும் உடனடியாக இடித்து விடுங்கள் என உத்தரவிட்டுள்ளோம். பாதுகாப்பற்ற முறையில் உள்ள பள்ளி கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க கூடாது.

பள்ளிகளில் உள்ள சுவிட்ச் போர்டுகளை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டு உள்ளோம். கிராமப்புறம் உள்ள பள்ளிகளில் கண்டிப்பாக தண்ணீர் தேங்க கூடாது என, வலியுறுத்தி உள்ளோம்.

இதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். அமைச்சர் கூறிய இந்த தகவலை கேட்டு பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியால் துள்ளி குதிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.