தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தா ரசிகர்களுக்கு ஷாக்கான நியூஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், அரிய வகை தோல் நோய்களில் ஒன்றான இதில் இருந்து விரைவில் குணமடைவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் சமந்தாவுக்கு ஆறுதலை கூறி வந்தனர். மேலும் கூடிய விரைவில் சமந்தா இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த அறிவிப்புக்கு பிறகு அவருடைய கொழுந்தனார் அகில் அக்கினேனி ஆறுதல் தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நாகச் சைதன்யா, சமந்தாவுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது தன் முன்னாள் காதல் மனைவியை தேடி நாக சைதன்யா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு, வெகுவாக வைரலாகி வருகின்றது. மேலும் நாக சைதன்யா சமந்தாவின் உடல்நிலை பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளையும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் இவர்களை தொடர்பான மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது, அதன்படி இந்த சந்திப்பின் போது தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடுவது பற்றியும் அவர்கள் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது அவர்களுடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது, ஆனால், இது உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.