அமராவதி, :ஆந்திர பிரதேசத்தில், தனியார் பொறியியல் கல்லுாரியின் விடுதியில், ஒரு மாணவரை சக மாணவர்கள் கம்பால் தாக்கியதுடன், ‘அயர்ன் பாக்ஸ்’ மூலம் சூடு வைத்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் தனியார் பொறியியல் கல்லுாரி ஒன்று உள்ளது.
இதன் விடுதியில் உள்ள ஒரு அறையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் ஐந்து மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இவர்களில் நான்கு பேர் ஒன்று சேர்ந்து, அங்கித் என்ற மாணவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர், தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார்.
ஆனாலும், விடாமல் தாக்கியதுடன், அவருக்கு அயர்ன் பாக்ஸ் மூலம் சூடும் வைத்தனர்.
இதனால், அவரது நெஞ்சு, கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அம்மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, கல்லுாரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினரிடம், மாணவர் எதற்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement