புதுடில்லி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ரொக்கச் செலவை, 2,000 ரூபாயாக குறைக்க தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் கமிஷன் விதிகளின்படி, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், 10 ஆயிரம் ரூபாய் வரையிலான செலவை, ரொக்கமாக செலுத்தலாம். அதற்கு மேற்பட்ட செலவை, காசோலை, வங்கியில் இருந்து பரிமாற்றம், வரைவோலை மூலமாகவே செய்ய வேண்டும்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, வேட்பாளர் பெயரில் தேர்தலுக்காக தனியாக வங்கி கணக்கு துவக்க வேண்டும். அதன் விபரங்கள் வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன், தேர்தல் செலவு குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், தேர்தல் நடைமுறையை மேலும் வெளிப்படைதன்மை உடையதாக மாற்றும் வகையில், தேர்தல் கமிஷன் புதிய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
வேட்பாளர் ரொக்கமாக செலவு செய்யும் உச்ச வரம்பை, 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement