அந்த ஆளோட மூஞ்சகூட காட்டக்கூடாது… ஊடகங்களுக்கு பயங்கர கட்டுப்பாடு!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது.

இதனால் கோபமடைந்த அவர், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை காரணமாக வைத்து ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே நடத்த கோரி, இம்ரான் கானின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி கடந்த வாரம் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகரை பேரணி அடைந்தபோது, இம்ரான்கான் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்மை கொல்ல தீட்டப்பட்ட சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர், உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் சில தினங்களுக்கு முன் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு… பிரதமரை கைக்காட்டும் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி!

இதனிடையே, இம்ரான் கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப‌க் கூடாது என பாகிஸ்தான் நாட்டு ஊடக‌ங்களுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசு உத்தரவிட்டுள்ளது. தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான் கான் முயற்சிப்பதால், ஊடகங்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும், இதனை மீறி அவர் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.