
சமந்தா படத்தை தமிழ், மலையாளத்தில் வெளியிடும் சூர்யா
தெலுங்கில் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யசோதா. வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இந்த படத்தில் சமந்தா உடன் வரலட்சுமி சரத்குமார், ரமேஷ், உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வாடகைத்தாய் முறைகேட்டை சுற்றி நடக்கும் கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் யசோதா படத்தை தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடும் உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் பெற்றுள்ளது. அதோடு இந்த இரண்டு மொழிகளிலும் அதிகப்படியான திரையரங்கங்களில் வெளியிடவும் இந்த நிறுவனம் தயாராகி வருகிறது.