வாஷிங்டன், “மிக முக்கியமான அறிவிப்பை வரும், 15ம் தேதி வெளியிடுவேன்,” என, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஒஹியோ மாகாணத்தில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று பேசினார்.
அப்போது, ”வரும் 15ம் தேதி முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன்,”என்றார்.
இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2024ல் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி டிரம்ப் அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, சமூக வலைதளமான டுவிட்டரில் இருந்து வெளியேறிய டிரம்ப், மீண்டும் அதில் இணையலாம் என்றும் கூறுகின்றனர்.
கடந்த 2016ல் அமெரிக்க அதிபர் பதவியை ஏற்ற டிரம்ப், 2020ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறிவந்தார். பின், தனக்குத் தானே சமாதானம் அடைந்து, அந்த முடிவை கைவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement