இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கிய முழு சந்திர கிரகணம், மாலை 6.19 முண்டிந்தது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை மக்கள் கண்டு களித்தனர்.
தமிழகத்தில் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் பார்ப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ள அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழகத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை.
தலைநகரான சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், மழை மேகங்களால் வானத்தில் முழு நிலவு தென் படவில்லை.
இது குறித்து சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்திரராஜா பெருமாள் தெரிவிக்கையில், “இன்று முழு சந்திரகிரகணம் ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்பட்டது. மழை மற்றும் மேகம் காரணமாக முன்பே கணித்தபடி சென்னையில் சந்திரகிரகணம் தென்படவில்லை. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ந் தேதி நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும்.” என்று தெரிவித்தார்.