பாப்புலர் பிரண்ட் ஆபீசுக்கு மீண்டும் சீல்

விருதுநகர்: விருதுநகரில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகத்திற்கு போலீசார் மீண்டும் சீல் வைத்தனர். விருதுநகர், பாவாலி சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு  நாடு முழுவதும் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, விருதுநகர் அலுவலகத்தை போலீசார் கண்காணித்து வந்தனர். கடந்த வாரம் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பான மத்திய அரசின் அரசாணையை விருதுநகர் பஜார் போலீசார் அலுவலகத்தில் மீண்டும் ஒட்டி சீல் வைத்தனர். மேலும், அமைப்பின் விருதுநகர் மாவட்ட தலைவர் முகமது ஹக்கிம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.