பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக மீரா பணியாற்றினார். இதே பள்ளி மாணவி கல்பனா. முதல் முறையாக உடற்கல்வி வகுப்பில் சந்தித்த போதே ஒருவர் மீது ஒருவருக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலில் வீழ்ந்தனர். இதையடுத்து, கல்பனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பிய மீரா, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற முடிவு செய்தார்.கடந்த 2019ம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சையை படிப்படியாக செய்தார். தற்போது அவர் முழு ஆணாக மாறி விட்டார். இதைத் தொடர்ந்து, மீரா – கல்பனா திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதித்தனர். மீரா தனது பெயரை ஆரவ் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த ஞாயிறன்று ஆரவ் – கல்பனா திருமணம் விமரிசையாக நடந்துள்ளது.
