பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் மொபைல் ஆப் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்வதற்காக, ‘நம்ம மெட்ரோ’ என்ற ஆப்-ஐ கடந்தவாரம் வெளியிட்டுள்ளது. இதுவரை, ‘கியூ ஆர்’ கோடுடன் அச்சிடப்பட்ட காகிதத்திலான டிக்கெட் வழங்கப்பட்டது. மக்கள் இந்த டிக்கெட் வைத்துதான், மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.

இந்த நிலையில், டிக்கெட் கவுண்டரில் மக்கள் வரிசையில் நின்று நேரத்தை விரயமாக்குவதையும், சூழலை மேம்படுத்த காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கவும், மொபைல் ஆப்பிலேயே கியூ ஆர் கோடுடன் கூடிய டிக்கெட் வழங்கப்படுகிறது. மக்கள், இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணிக்கலாம். மேலும், கட்டணம், வழித்தடம் உள்பட பல தகவல்களை இந்த ஆப் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.