தேனி மாவட்டம் போடி அருகே பள்ளி மாணவர்கள் கடத்தல் வழக்கில், பள்ளிக்கு கட் அடித்துவிட்டு ஊர் சுற்றியதால் பெற்றோருக்கு பயந்து மாணவர்களே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
சில்லமரத்துப்பாடி அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர் பள்ளி கட் அடித்துவிட்டு ஊர் சுற்றியுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் இருந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கம்பளி போர்வை விற்பனை செய்யும் இளைஞரை காண்பித்து, தங்களை கடத்திச் செல்ல முயன்றதாக மாணவர்கள் கூறியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அந்த வடமாநில இளைஞரை பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளிக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடத்தல் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.