வருமான வரித் துறையினர் நடவடிக்கை: தெலங்கானா மாநில அமைச்சர் வீடு, அலுவலகத்தில் சோதனை

ஹைதராபாத்: தெலங்கானா அமைச்சர் கங்குல கமலாகர் மற்றும் கிரானைட் வியாபாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தெலங்கானா மாநில உணவு, சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்ட விரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

20 குழுக்கள்: இதனையொட்டி, நேற்று காலைஹைதராபாத், கரீம் நகர் ஆகியபகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப் பிரிவினர் 20 குழுக்களாக பிரிந்து ஒரே சமயத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்பு பகுதிகள், குவாரிகள், கிரானைட் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதில், கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

மேலும், இவருக்கு நெருக்க மாக உள்ள பல கிரானைட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரேநேரத்தில் அதிரடி சோதனை நடத்தில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே சமயத்தில் 20 இடங்களில் நடந்த இந்த சோதனையால் தெலங்கானா அரசியலில் சலசலப்பு உருவாகி உள்ளது. விரைவில் இவரது பதவி பறிக்கப்படலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.