துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான இஸ்திக்லால் கடை வீதி பகுதியில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த பிரதான நடைபாதை வீதியில் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
அங்கு பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இதற்கு முன் 2015 மற்றும் 2017இல் இதே இடத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், மற்றுமொரு குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. போலீசாரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை தொடங்கினர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in