CSK-வின் பிரச்சனையே இதுதான்.. தோனி, ருதுராஜ் பிளான் என்ன? – முழு விவரம்!

Chennai Super Kings Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் படுமோசமாக விளையாடியது. இதனால் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கி சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவர்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து ஒரு இளம் வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்க இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

MS Dhoni Retirement: விரைவில் விடைபெறும் தோனி 

தோனி விரைவில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற இருப்பதால் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை எடுக்க வேனடும் என்ற எண்ணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் வாங்கியது. இதற்கு சிஎஸ்கே அணியின் ஒரு தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து அந்த ரிஸ்க்கையும் அவர்கள் எடுத்துள்ளனர். 

CSK: பலமாக மாறிய சிஎஸ்கே அணி 

மினி ஏலத்தில் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் என இந்திய அணிக்காக இதுவரை அறிமுகம் ஆகாத அன்கேப்டு வீரர்களை கோடிகள் கொட்டி வாங்கி மிடில் ஆர்டரை பலப்படுத்தியது. அதுபோக ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஷார்ட் போன்ற வீரர்களை வாங்கி பேட்டிங் துறையையும் பலப்படுத்தியது. ஏற்கனவே ஸ்பின்னரில் நூர் அகமது அணியில் இருக்க அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகீல் ஹொசைனை வாங்கியது. மேலும், மேட் ஹென்றி, ஜாக் போல்க்ஸ் ஆகியோரை வாங்கி வேகப்பந்து வீச்சையும் பலப்படுத்தி உள்ளது. 

இப்படி வரும் 2026 ஐபிஎல்லில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கி அணியை பலப்படுத்திய நிலையிலும், ரசிகர்கள் சில கவலை தெரிவிக்கின்றனர். அதாவது சென்னை அணியில் பிரச்சனை பேட்டிங்கில் இல்லை, பந்து வீச்சில்தான் என கூறி கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரசிகர்களின் இந்த கவலைக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். அவர் அவர்களுக்கு தெம்பை ஊட்டும் விதமாக பதில் கூறி உள்ளார். 

Nathan Ellis, Noor Ahmad & Akeal Hosein: நாதன் எலிஸ், நூர் அகமது, அகீல் ஹொசைன்

நீங்கள் நாதன் எலிஸ், அகீல் ஹொசைன் ஆகியோர் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை கவனிக்கவில்லையா? அவர்களுடன் நூர் அகமத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். அதாவது நாதன் எலிஸ் நடந்து வரும் பிக் பஸ் (Big Bash League) தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல் அகீல் ஹொசைன் நடந்து வரும் SA20ல் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி வருகிறார். இவர்களுடன் எதிரணியை அச்சுறுத்தும் ஸ்பின்னராக நூர் அகமது இருக்கிறார். கடந்த சீசனில் 24 விக்கெட்களை கைப்பற்றி ஊதா தொப்பிக்கு (Purple Cap) போட்டிப்போட்டு வந்தார். எனவே இவர்கள் இருக்கையில் கவலை வேண்டாம் என ரசிகர்களை ஆறுதல்படுத்தி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். 

CSK Full Squad For IPL 2026: ஐபிஎல் 2026க்கான சிஎஸ்கே அணி

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (ஆர்ஆர் அணியில் இருந்து வர்த்தகம் செய்யப்பட்டார்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரூவிஸ், ஷிவம் துபே, உர்வில் படேல், நூர் அகமது, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அகமது, ராமகிருஷ்ண கோஷ், முகேஷ் சவுத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் காம்போஜ்.

ஏலத்தில் வாங்கியவர்கள்: அகீல் ஹொசைன் (ரூ. 2 கோடி), பிரசாந்த் வீர் (ரூ. 14.20 கோடி), கார்த்திக் சர்மா (ரூ. 14.20 கோடி), மேத்யூ ஷார்ட் (ரூ. 1.5 கோடி), அமன் கான் (ரூ. 40 லட்சம்), சர்பராஸ் கான் (ரூ. 75 லட்சம்), மேட் ஹென்றி (ரூ. 2 கோடி), ராகுல் சாஹர் (ரூ. 5.2 கோடி), சாக் ஃபௌல்க்ஸ் (ரூ. 75 லட்சம்).

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.