தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் குட்கா கடத்தியவர் அளேசீபம் கிராமத்தை சேர்ந்த இம்ரான் என்பது தெரியவந்தது. பதுக்கியிருந்த 410 கிலோ குட்கா பொருட்களுடன் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
