கார்த்திகை தீபம் எதிரொலி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபம் எதிரொலியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தருவர். இதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகிறது.

அண்ணாமலையாரின்  உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. மேலும் கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும்  தொடங்கி நடை பெற்று வருகிறது. மேலும் பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார். ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர், கார்த்திகை தீபத்தின்போது மேற்கொள்ளப்படும் பணிகள்,   பரணி தீபம், மகாதீபம்  மற்றும் தீபம் ஏற்றப்படும் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,  அறநிலை துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக் குமார், தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கார்த்திகை தீபம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், அமைச்சர் சேகர்பாபு,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.