ரச்சிதா சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்

சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் அவரது கணவர் தினேஷும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதா தற்போது பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார். என்னதான் மனைவி தன்னை விட்டு பிரிந்திருந்தாலும் அவர் மீது இப்போதும் பாசம் வைத்திருக்கும் தினேஷ், பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியானது முதல் இப்போது வரை ரச்சிதாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவை க்ரஷ் என்று சொல்லித்திரியும் ராபர்ட் மாஸ்டர் பார்ப்பவர்களை கடுப்பேற்றி வருகிறார். ராபர்ட்டை அண்ணன் என்று ரச்சிதா சொல்லியும் கூட தனக்கு முத்தம் கொடுக்குமாறு வற்புறுத்தி கேட்டபது பலரையும் எரிச்சலடைய செய்தது. இதனால் ரச்சிதாவின் ரசிகர்கள் பலரும் ஸ்டேண்ட் வித் ரச்சிதா என்ற ஹேஷ்டேக்குடன் ராபர்ட் மாஸ்டரின் செயல்களை கண்டித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். ரச்சிதாவின் கணவர் தினேஷும் அந்த ஹேஷ்டேக்கையும் பதிவையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து தன் மனைவிக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

மேலும், அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றிலும், 'ஒரு பெண் ஒரு ஆணுடன் சேர்ந்து பழகுவதாலேயே காதல் என்று சொல்லிவிடக்கூடாது. இதை பார்க்கும் போது பள்ளி செல்லும் சின்ன குழந்தைகள் செய்யும் செயல் போல உள்ளது. மற்றப்படி ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் ஒரு சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்' என்று கூறியிருந்தார்.

ராபார்ட் மாஸ்டர் தன்னுடன் ப்ளிர்ட் செய்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரச்சிதா ஒரு சில சமயங்களில் அதை தடுக்காமல் என்க்ரேஜ் செய்வது போல் நடந்து கொண்டார். அதை தான் தினேஷ் மறைமுகமாக 'சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்' என சொல்லியிருப்பதாக பலரும் தற்போது பேசி வருகின்றனர். இதேபோன்ற செயலுக்காக அசலை வெளியேற்றிய பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டரையும் வெளியேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.