தமிழகத்தில், மின்சாரம், சொத்துவரி மற்றும் பால்விலை உயர்வை கண்டித்து, ஈரோடு அந்தியூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு மத்திய அரசு விலையை குறைத்தபோதும், மாநில அரசு விலையை குறைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.