மசூதி மதராசாவுக்கு செல்லும் மோகன் பகவத்! தேர்தல் பராக் பராக்!

புதுடெல்லி: செளதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் பிரதமர் மோடி ‘தொப்பி’ அணிந்துள்ளார், ஆனால் இந்தியாவில் மட்டும்அவர் தலையில் ‘தொப்பி’ போடுவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நக்கல் செய்கிறார். பாஜக மற்றும் சங்பரிவாரை சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதரஸாக்கள், மசூதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கிண்டல் செய்கிறார். அது மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியும் சில நாட்களில் மசூதிக்கும் மதரசாவுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்கலவை உறுப்பினர் திக்விஜய் சிங் இன்று (நவம்பர் 15 செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.  

‘பாரத் ஜோடோ யாத்ரா’ நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திக்விஜய், யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கு மத்தியில் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அண்மை நாட்களில் பாஜக குறிப்பாக ராகுல் காந்தியை விமர்சிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஏனெனில் அவர் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பகவத் மதரஸா மற்றும் மசூதிக்கு செல்லத் தொடங்கினார். சில நாட்களில் மோடியும் தொப்பி அணியத் தொடங்குவார்” என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.

சவூதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் பிரதமர் மோடி ‘தொப்பி’ அணிவார் என்றும், ஆனால் இந்தியா திரும்பிய பிறகு அவர் தலையில் ‘தொப்பி’ அணிவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கூறினார். இதனுடன், செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இரண்டு மாதங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் விளக்கமாகக் கூறினார்.

“இந்த யாத்திரை அதன் இறுதி இடமான ஸ்ரீநகரை அடையும் போது என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம்” என்று திக்விஜய் சிங் சவால் விடுத்தார்.

குஜராத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து பேசிய திக்விஜய், இந்த கட்சிகள் சங்கத்தின் ‘காங்கிரஸ்-முக்த் பாரத்’ மற்றும் ‘பாஜகவின் பி-டீம்’ ஆகியவற்றின் ஒரு பகுதி என்று பல ஆண்டுகளாக தான் கூறி வருகிறேன். இரு கட்சிகளும் மற்ற கட்சிகளின் வாக்குகளை குறைக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றன என்றும், அதனால் பாஜகவுக்கு நன்மை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.