மதுரை: விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19க்குள் தியாகி இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. தமிழக முதல்வர், விருதுநகர் ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின் சிலையை வைக்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
