
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ரோ 2 விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச மற்றும் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி, கேட்ஜெட் விற்பனையிலும் வரவேற்பை பெற்ற ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.

இது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இதனைத் தொடர்ந்து, தற்போது இதன் மேம்பட்ட வெர்ஷனான புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதாகவும், அடுத்த காலாண்டு வாக்கில் அறிமுகம் ஆகலாம் எனவும் டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.