இரண்டு வருடங்களில்  தொழில் நுட்ப துறையில் புதிதாக ,1000 புதிய தொழில்,  தொழில் முயற்சியாளர்களுக்கான  வாய்ப்பு

எதிர்வரும் இரண்டு வருடங்களில்  தொழில் நுட்ப துறையில் மாத்திரம் புதிதாக 1000 புதிய தொழில்  தொழில் முயற்சியாளர்களுக்கான  வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் , அதேபோன்று இத்துறையில் 30,000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில் நுட்ப முகவர் நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஏற்றுமதி வருமானம் 3 மில்லியன் அமெரிக்க டோலர்களாகும். இதற்காக புதிய தொழில் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆரம்ப சந்தர்ப்பத்தில் இருந்து நிதித்துறை தொடர்பிலான  தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளைப் போன்று சந்தை வாய்ப்புக்கான வசதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

இம்முறை உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தை (The Global Entrepreneurship Week -GEW )  முன்னிட்டு இதற்கான அறிவிப்பு இடம்பெற்றது.இதுதொடர்பான ஆரம்ப நிகழ்வு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிறுவகத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும். உலகளாவிய ரீதியில்  140க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் இணைந்துகொண்டுள்ளன. பல்வேறுபட்ட தொழில் முயற்சியாளர்கள்,  முதலீட்டாளர்கள் ஒத்துழைப்புக்கான அமைப்புக்கள் இதில் ஒன்றிணைந்துள்ளன உலகளாவிய ரீதியில் இம்முறை இதற்கு ஒத்துழைப்பு நல்கும் அமைப்புக்களின் எண்ணிக்கை 20, 000க்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் தொழில் முயற்சியாளர்களை அடையாளங் கண்டு அவர்கள் வலுவூட்டபடுவார்கள். இதன் போது சர்வதேச ரீதியில் சுமார் 40,000 செயற்பாட்டாளர்களை உருவாக்க  இந்த முறை  திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழிநுட்பம் முகவர் நிறுவகம் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள புத்தாக்க தொழில்முனைவோர் இதில் பங்குதார்களாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படும். இந்த ஆண்டு, இந்த தொழில்முனைவோர் வாரத்திற்கு  (GEW 2022)   அமைவாக , இலங்கை, புதிய  வணிக சூழல் கட்டமைப்பு, தொழில் முனைவோருக்கான  வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு , ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் சம வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல் மற்றும் தொழில்முனைவோர் நட்பு கொள்கைகள் ஆகிய கருப்பொருள்களின் கீழ் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக இந்த வாரம் முழுவதும் பல்வேறு தகவல் பகிர்வு மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், மாநாடுகள் முதலானவை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பெறப்பட்ட யோசனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய  வணிகர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் சேம நலன்களை   மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர்  திலகா ஜயசுந்தர, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவகத்தின்  தலைவர், பேராசிரியர் மலிக் ரணசிங்க, உலகளாவிய தொழில்முனைவோர் – இலங்கை வலையமைப்பின் பதில்  முகாமைத்துவ பணிப்பாளர்  திரு சுரேஷ் டி மெல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவகத்தின் பதில் பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சசீந்திர சமரரத்ன IronOne Technologies & Board PAC   இணைப்பாளர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்வி,லக்மினி விஜேசுந்தர Score Lab இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சரிதா எல்விடிகல,  பிரதம அனுசரணையாளர் ,  புதிய தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.