புதுடில்லி நம் கடற்படை பல்கலையில் சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பெண்கள் சேருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
கடற்படை பல்கலையில் பெண்கள் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் பெண்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பெண்களை பல்கலையில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விளக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா வாதிடுகையில், ”கடற்படை பல்கலையின் நிர்வாக கிளை, பொது சேவை பிரிவு, ஐ.டி., தொழில்நுட்ப கிளை பொறியியல், மின்னணு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பெண்கள் இணைந்து படிக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
”எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல,” என, வாதிட்டார்.
இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement