போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க சாத்தியமில்லை என அமெரிக்கா அளித்த பதிலுக்கு, ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய கிரெம்ளின் செய்தித்தொடர்பாளார் டிமிட்ரி பெஸ்கோவ், போலந்தில் ஏவுகணை விழுந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எந்த தொடர்புமில்லை எனவும், இதுகுறித்த அமெரிக்காவின் தொழில்முறை ரீதியான பதில் கவனிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.