வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணியர் வருகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும், 2021ல், 15.24 லட்சம் வெளிநாட்டு பயணியர் நம் நாட்டுக்கு வந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் 25ம் தேதி, அனைத்து சர்வதேச விமான சேவையையும் மத்திய அரசு ரத்து செய்தது.
தொற்று பரவல் குறைந்ததும் படிப்படியாக சேவை துவங்கப்பட்டாலும், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் இரண்டு ஆண்டுகள் இயக்கப்படாமல் இருந்தன. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.
அதே போல நம் நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான, ‘விசா’ வினியோகத்திலும் 2021ல் கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டன.
![]() |
அப்படி இருந்தும் கடந்த ஆண்டு ஜன., 1 முதல் டிச., 31 வரையிலான காலகட்டத்தில், 15.24 லட்சம் வெளிநாட்டு பயணியர் நம்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 4.29 லட்சம் பேர் வந்துள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக வங்கதேசத்தில் இருந்து 2.40 லட்சம் பேரும், பிரிட்டனில் இருந்து 1.64 லட்சம் பேரும், கனடாவில் இருந்து 80 ஆயிரம் பேரும் நம் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement