டோக்கியோ, மின்சார மோட்டார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ‘நிடெக் ஜப்பான்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம். இதையடுத்து, நிடெக் ஜப்பான் நிறுவனம், ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார்களை தயாரித்து வழங்க உள்ளது.
வரும், 2023ம் ஆண்டு முதல் இந்த வகை மோட்டாரை பயன்படுத்த உள்ளதாக ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோஹிந்தர் கில் கூறியதாவது:
ஹீரோ எலக்ட்ரிக் மின்சார வாகனங்களுக்கு தேவையான உபகரண வினியோகஸ்தர்களை கடந்த சில ஆண்டுகளாக தேடி வந்தோம்.
பெரும்பாலான இந்திய நிறுவனங்கள், மின்சார வாகனங்களின் குறைந்த விற்பனையின் காரணமாக, இதில் முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை.
ஆனால், நிடெக் ஜப்பான் நிறுவனம், வளர்ந்து வரும் எங்கள் வினியோக சங்கிலியில் எந்தவித தடங்கல்களையும் ஏற்படுத்தாமல், தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. அத்துடன் எங்கள் மின்சார வாகனங்களுக்கு தேவையான ‘பவர் டிரைன்’ஐ உருவாக்கவும் உதவியாக இருந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement