இளவரசி டயானாவை பலருக்கும் பிடிக்கும். அவரிடம் நல்ல குணங்களும் உண்டு, மோசமான குணங்களும் உண்டு.
உலகம் அவரை எப்படிப் பார்த்தாலும், தன் பிள்ளைகளைப் பொருத்தவரை, அவர் ஒரு கட்டுப்பாடான தாயாக இருந்திருக்கிறார்.
டயானா தன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்த பாடம்
இளவரசி டயானா, தனது பிள்ளைகள் நல்ல விடயங்களைப் பின்பற்ற கற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக நன்றி சொல்வதை அவர் தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
வாழ்க்கை என்பது தங்கத்தட்டில், வெள்ளிக் கரண்டியால் சாப்பிடும் உணவு மட்டும் அல்ல, வெளி உலகம் வேறு மாதிரி இருக்கும் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காக தன் பிள்ளைகளை தொண்டு நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்வாராம் டயானா.
மறக்காத இளவரசர் வில்லியம்
தன் தாய் தங்களுக்கு சொல்லிக்கொடுத்த நல்ல விடயங்களை, தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க மறக்கவில்லை இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும்.
குட்டி இளவரசர்கள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருக்கும் நன்றிக் கடிதங்கள் எழுதக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் அவர்கள்.
Image: Getty
குறும்புக்கார ஹரி
இளவரசர் ஹரியைப் பொருத்தவரை அவர் குறும்புக்காரராம். ஒருமுறை, பேருந்து ஒன்றில் தன் பிள்ளைகளை அழைத்துச் சென்றாராம் டயானா.
அப்போது அவர்கள் பயணித்த பேருந்தின் சாரதி, அவர் ஒரு சீக்கியர், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தும்போதும், அந்த பேருந்து நிலையத்தின் பெயரைச் சொல்லிவிட்டு ’parp, parp, ring, ring’ என ஒலி எழுப்புவாராம்.
பேருந்திலிருந்து டயானாவும் பிள்ளைகளும் இறங்கும் இடம் வந்ததும், பேருந்திலிருந்து இறங்கும் முன் அந்த சாரதியைப் பார்த்து, அவரைப் போலவே ’parp, parp, ring, ring’ என சத்தமிட்டாராம் ஹரி.
இந்த செயல் டயானாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தவே, உடனடியாக அந்த சாரதியிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஹரியை வற்புறுத்தினாராம் அவர்.
ஆனால், அந்த சாரதியோ, இளவரசருக்கு அது பிடித்திருக்கிறது, அதனால்தான் அப்படிச் செய்தார் என்று கூறி அதை ஜாலியாக எடுத்துக்கொண்டாராம்.
Image: WireImage