
ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி பெரும்பாலானோர் ராஜினாமா செய்துள்ள நிலையில் டுவிட்டரில் # RIP Twitter என்னும் ஹாஸ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.
100க்கு மேற்பட்ட ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்படும் என்பதால் அதனை எலான் மஸ்க் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது எல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது.